Our team

header ads

 கோவையில் மருத்துவரின் தாய் கொலை சம்பவம் : வேலைக்கார பெண் - கூட்டாளிகளை 3 மாநிலங்களில் தேடும் தனிபடை போலீஸ் !!!*


கோவை, நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்தவர் கோபாலன் குட்டி மனைவி கஸ்தூரி (வயது 82). கோபாலன் குட்டி இறந்து விட்ட நிலையில் கஸ்தூரி தனது மகன் மருத்துவர் ராம்குமார் குட்டி என்பவர் உடன் வீட்டில் வசித்து வந்தார். 

ராம்குமார் குட்டி தனது தாயார் கஸ்தூரியை பராமரித்துக் கொள்ள நேபாள் நாட்டைச் சேர்ந்த சுர்ஜா என்ற வேலைக்காரப் பெண்ணை நியமித்து இருந்தார். கடந்த 4 மாதமாக சுர்ஜா கஸ்தூரியை பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கஸ்தூரி வீட்டில் உள்ள படுக்கை அறை கட்டிலில் கை, கால் கட்டப்பட்ட கலையில் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி போலீஸ் கமிஷனர் வசந்த ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது வேலைக்காரப் பெண் சுர்ஜா மற்றும் 3 பேர் கஸ்தூரியை கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் நேற்று முன்தினம் இரவு சுர்ஜா உடன் மேலும் 3 பேர், கஸ்தூரி வீட்டில் இருந்து கொலை செய்து வட்டு வெளியேறும் காட்சி பதிவாகி உள்ளது.

சம்பவத்தன்று கஸ்தூரியின் மகன் டாக்டர் ராம்குமார் குட்டி வெளிநாடு சென்று வட்டார். இதனால் வேலைக்கார பெண் சுர்ஜா உடன், வீட்டில் இருந்த கஸ்தூரி அருகே உள்ள சிங்காநல்லூரில் வசிக்கும் மகள் சுஜாதா வீட்டிற்கு காரில் சென்று உள்ளார். அப்போது வேலைக்கார பெண் சுர் ஜாவும் அவருடன் காரில் சென்று உள்ளார். 

அதன் பிறகு இருவரும் இரவு 7 மணிக்கு அங்கு இருந்து கஸ்தூரி வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அதன் பிறகு இரவு 12 மணிக்கு கஸ்தூரியை சுர்ஜா, 3 பேருடன் சேர்ந்து கொலை செய்து உள்ளார். 

கஸ்தூரியை கொண்டு அவர் அணிந்து இருந்தார் 2 பவுன் தங்க சங்கிலியை கொள்ளை அடித்து விட்டு சுர்ஜா, தப்பிச் சென்று உள்ளார். சுர்ஜா, மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

தனிப்படை போலீசார் பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உள்ளனர். சுர்ஜா உடன், வந்த கூட்டாளிகள் அவரது கணவர் மற்றும் நண்பர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

4 மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்த சுர்ஜா, வீட்டில் அதிக நகை பணம் இருக்கும் என்று எதிர்பார்த்து, அதை கொள்ளை அடிக்க கூட்டாளிகளுடன் திட்டம் போட்டு இருக்கலாம் என்றும் ஆனால் எதிர்பார்த்த நகை, பணம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் தப்பி சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இருப்பினும் சுர்ஜாவை பிடித்தால் கொலைக்கான முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று போலீசார் கூறினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks