Our team

header ads

மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்குகள்.. மோசடி நபர் கைது

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி, பொதுமக்களிடம் பணம் மோசடி செய்யும் நோக்கில் பல போலி வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளர் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ்குமார் (21) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்கியது விசாரணையில் உறுதியானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks