எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. 30 கல்வெட்டுகளில் 20 தமிழ் மொழியில் உள்ளன. கி.பி 1-3 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் வணிகர்கள் எகிப்துக்குச் சென்றதற்கான நேரடி ஆதாரமாக இது அமைந்துள்ளது. 'சிகை கொற்றன்' என்ற வணிகரின் பெயர் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்பொருள் துறை ஏற்பாடு செய்த மாநாட்டில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் பேராசிரியர்கள் இந்த தகவலை வெளியிட்டனர்.

0 கருத்துகள்