சிவராத்திரியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளை (பிப்., 15) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து இறைச்சி கடைகள், இறைச்சிக் கூடங்களை மூட கிரேட்டர் பெங்களூரு ஆணையம் (GBA) உத்தரவிட்டுள்ளது. நகர எல்லைக்குள் விலங்குகளை வெட்டுவதும், இறைச்சி விற்பனை செய்வதும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், ஆன்லைன் இறைச்சி விநியோகத்திற்குப் பொருந்தும். தடையை மீறுபவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துகள்