Our team

header ads

கோவையில் பரபரப்பு : பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடந்த வேளையில் அண்ணாமலை ஆதரவு போஸ்டர் யுத்தம் !!!

கோவையில் பரபரப்பு : பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடந்த வேளையில் அண்ணாமலை ஆதரவு போஸ்டர் யுத்தம் !!!

Fearless Minds Have No Limits" பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை" - லண்டனில் அண்ணாமலை ; கோவையை அதிர வைத்த 'Army of Dheeran Annamalai' போஸ்டர்கள் !!!

தமிழக அரசியல் களத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கோயம்புத்தூரில், பா.ஜ.க மையக்குழுவின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்து வரும் இதே வேளையில், நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அதிரடி ஆதரவு போஸ்டர்கள் தற்பொழுது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் "ஹாட் டாபிக்" ஆக மாறி பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. 

கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தேர்தல்களில் களம் கண்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட அதிரடி ஆலோசனைக் கூட்டம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, தற்பொழுது உயர் கல்விக்காக வெளிநாட்டில் (லண்டன்) தங்கி இருக்கும் அண்ணாமலை இந்த கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. அவர் தமிழகத்தில் இல்லாத இந்தச் சூழலிலும், அவரது தீவிர ஆதரவாளர்கள் கோவை நகரின் பல்வேறு முக்கிய போஸ்டர்கள் ஒட்டி உள்ள பிரம்மாண்ட சுவரொட்டிகள் தான் தற்பொழுது "நெட்டிசன்"கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

“Fearless Minds Have No Limits” — அதாவது “பயமறியாதவர்களுக்கு எல்லையே கிடையாது” என்ற அதிரடியான ஆங்கில வாசகத்துடன், அண்ணாமலையின் கம்பீரமான புகைப்படமும் அந்த போஸ்டர்களில் இடம் பெற்று உள்ளது. பொதுமக்களையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது.

​மேலும், இந்த சுவரொட்டிகளின் கீழே “Army of Dheeran Annamalai” (தீரன் அண்ணாமலை படை) என்ற பெயரில் வெளியிடப்பட்டு இருப்பது தான் கோவை அரசியலில் புதிய  புயலைக் கிளப்பி உள்ளது.

அண்ணாமலை ஊரில் இல்லாத நேரத்திலும், அவரது ஆதரவுப் பட்டாளம் கோவை மாநகர வீதிகளில் இத்தகைய போஸ்டர்களை ஒட்டி தங்களது பலத்தைக் காட்டி இருப்பது, பா.ஜ.க உள்கட்சிக்கு உள்ளேயே ஒரு புதிய அரசியல் சிக்னலை அல்லது கணக்கை உணர்த்துகிறதா ? என்ற மில்லியன் டாலர் கேள்வியைக் கட்சி வட்டாரத்தில் உருவாக்கி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks