முதல்வர் மு.க.ஸ்டாலின்- இன்று கோவை வருகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை தருகிறார். இதை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கும் அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல், விழா நடைபெறும் வெங்கடாபுரம், நீலாம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்தப் பகுதிகளில் நாளை மாலை 6:00 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டோர்ன்கள் பறக்க விட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
கோவை, காந்திபுரத்தில் தமிழக பொதுப்பணி துறையால் ரூபாய் 300 கோடியில் பெரியார் அறிவுலகம் என்கின்ற பெயரில் 8 தலங்களுடன் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படுகிறது. ஜனவரி மாதம் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் பணிகள் முடியாததால், பிப்ரவரி 28 க்குள் முடிக்கப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்து இருந்தார்.
நூலகம் என்பதால் புத்தகத்தை பிரித்து வைத்து இருப்பது போன்று வடிவமைப்பில் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் பக்கவாட்டு சுவர்களில் கண்ணாடிகள் பொருத்துவது சவாலாக இருந்தது, காற்று பலமாக வீசுவதால் கண்ணாடி பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் இணைந்து இன்குபேசன் சென்டர் அமைக்க வேண்டும், அவ்விரு தளங்கள் முடிவடையவில்லை மற்ற தலங்களில் சின்ன , சின்ன வேலைகள் நடந்து வருகின்றன. இன்று திறப்பு விழா நடத்தி விட்டு மீதமுள்ள வேலைகளை அதன் பின் செய்யலாம் என பொதுப் பணித்துறை முடிவு செய்திருந்தனர்.
இதேபோல் மாநகராட்சி சார்பில் உக்கடத்தில் பேருந்து நிலையம் டெர்மினல் கட்டப்படுகிறது. நேரு ஸ்டேடியம் எதிரில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றை ஒரே நேரத்தில் முதல்வரால் திறந்து வைக்க கோரப்பட்டது.
அனைத்து பணிகளும் முழுமையாக முடியவில்லை வேலைகள் நடந்து வருகின்றன என முதல்வர் அலுவலகத்திற்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பியது. அதனால் திறப்பு விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க மேற்கு மண்டல முகவர்கள் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார். சிறப்பு விமானத்தில் வரும் அவர் அறிவுலகத்துக்கு வந்து கட்டுமான பணிகளை நேரில் பார்வையிடுகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு அன்பில் மகேஷ் ஆகியோருடன் ஆலோசிக்கிறார்.
பின்னர் கார் மூலமாக போத்தனூர் காந்தி மியூசியம் செல்கிறார். காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு குழந்தைகள் பஜனை நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். அங்கு இருந்து நீலாம்பூரில் உள்ள ஹோட்டலுக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.
நீலாம்பூர் - கொச்சி சாலையில் மாலை 5 மணிக்கு நடக்கும் மேற்கு மண்டல தி.மு.க முகவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 1.50 லட்சம் முகவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் முருகேசன் செய்து உள்ளனர்.
பீளமேடு விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வழியாக காந்திபுரம், திருச்சி ரோடு சுங்கம் சந்திப்பு, வாலாங்குளம் பைபாஸ் உக்கடம் வழியாக போத்தனூர் செல்கிறார். அவர் செல்லும் வழித்தடத்தில் சாலையில் இருபுறமும் கட்சிக் கொடி வரிசையாக கட்டப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்