Our team

header ads

கோவை லட்சுமி மில் லுலுமாலில் கெட்டுப்போன சிக்கன் விற்பனை-சிக்கனை சாப்பிட்ட 2 குழந்தைகள் வாந்தி

கோவை லட்சுமி மில் லுலுமாலில் கெட்டுப்போன சிக்கன் விற்பனை-சிக்கனை சாப்பிட்ட 2  குழந்தைகள் வாந்தி,  நிர்வாகம் அலட்சியமான பதில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..


கோவையில் அண்மையில் லட்சுமி மில் சந்திப்பில் திறக்கப்பட்ட பிரபல லலுமால் நிறுவனத்தில்  நேற்று இரவு 8 மணியளவில் சசிகுமார் என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் லூலூ மால் சென்று  குழந்தைகளுக்கு ரோஸ்டட் சிக்கன், சிக்கன் சாண்ட்விச் , சிக்கன் லாலிபாப் வாங்கி கொடுத்துள்ளார் ,  சிக்கனை சாப்பிட்டு பிறகு பார்சலும் வாங்கி வெளியே வந்த போது இரண்டு குழந்தைகளும் கடுமையாக வாந்தி எடுத்துள்ளனர் இதை எடுத்து சிக்கனை பார்த்தபோது அதிகப்படியான துர்நாற்றம் வீசி உள்ளது , அதிர்ச்சடைந்த சசிகுமார் உடனடியாக சிக்கனை வாங்கிய கடைக்கு சென்று இது குறித்து கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

கெட்டுப்போன சிக்கனை விற்பனை செய்து சுகாதாரக் கேடு விளைவிக்கும் மேற்படியான லுலுமால் சிக்கன் கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks