ஈரான் போர் காரணமாக ஜவுளித் துறை ஏற்றுமதி பாதிப்பு - கோவை தொழில் துறையினர் கவலை !!!
இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆண்டுக்கு 300 கோடி டாலர் ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது. இதில் 200 கோடி டாலர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதியாகிறது. தற்போது நடந்து வரும் போரால் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்திய ஜவுளி ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 8 சதவீதம் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு செல்கிறது. போர் காரணமாக இது பாதிக்கப்படும் என்ற கவலை தெரிவிக்கின்றனர் ஜவுளி துறையினர்.
கச்சா எண்ணெய் விலை உயர்கிறது, இது பாலியஸ்டர் விலையில் எதிரொளிக்கும். பெட்ரோலியம் உபபொருள்களின் விலை, எரிசக்தி வாடகை என சங்கிலி தொடராக விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
போர் காரணமாக வழக்கமாக பாதையை விடுத்து மாற்றுப் பாதையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது பயண காலம் 22 நாட்கள் அதிகரிக்கும் கண்டெய்னரில் துவங்கி அனைத்து செலவுகளும் அதிகரிக்கும், கோடைகால ஆர்டர்களை குறித்த காலத்துக்குள் அனுப்பாவிட்டால், அபராதம் செலுத்த நேரிடும்.
கடந்த செப்டம்பர் முதல் அமெரிக்கா வரி விதிப்பால் பாதிக்கப்பட்டு, தற்போது தான் மீண்டு வரும் நிலையில், இந்தப் போர் மீண்டும் நெருக்கடியை தருகிறது என்றும் ஜவுளித் துறையினர் தெரிவித்தனர்.
ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும், அதுதான் ஜவுளித் துறைக்கு நல்லது என்பதை ஒட்டுமொத்த தொழில் துறையினரின் கருத்தாக உள்ளது.


0 கருத்துகள்