கோவை அருகே சிறுத்தை பீதி: "20 நாட்களாக வனத்துறை தூக்கமா ?" - அண்ணாமலை காட்டம் !!!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்து உள்ள ஒன்னிபாளையம் மற்றும் கக்குராயன் மலைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாகச் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், நிலவும் அசாதாரணச் சூழல் குறித்துத் தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையும் கிராம மக்களும் உறுதி செய்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதுவரை அந்தச் சிறுத்தைப் பிடிபடாமல் சுதந்திரமாக உலா வருவது இப்பகுதி மக்கள் இடையே பெரும் (அச்சத்தையும்) பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.
"பகலில் கூட வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலையில் மக்கள் இருக்கும் போது, நிர்வாகம் எங்கே தூங்கிக் கொண்டு இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பி உள்ள அவரது பதிவு செய்து உள்ளார்.
தேர்தல் பணிகளில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் மூழ்கியிருக்கும் இந்தச் சூழலில், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என அண்ணாமலை தனது பதிவில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியு உள்ளார்.
தமிழக வனத்துறை உடனடியாகத் தலையிட்டு, அதிநவீன கேமரா டிராப்கள் மற்றும் தானியங்கி கூண்டுகள் மூலம் விஞ்ஞானப் பூர்வமான தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
"ஒவ்வொரு வினாடியும் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில், தேர்தல் பணிகளைக் காரணம்காட்டி வனத்துறை மெத்தனமாக இருக்கக்கூடாது" என அவர் ஆவேசமாகப் பதிவு செய்து உள்ளார்.
கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகளில் மனித-வனவிலங்கு மோதல் அதிகரித்து வரும் வேளையில், அண்ணாமலையின் இந்தத் பதிவு வனத்துறை அதிகாரிகள் இடையே ஒருவித (அழுத்தத்தை) உருவாக்கி உள்ளது.


0 கருத்துகள்