Our team

header ads

ஆட்சிகள் மாறினும் காட்சிகள் மாறவில்லை !!! கோவையில் கொடூரம்.. 10 வயது சிறுமி சடலமாக குளக்கரையில் சடலமாக மீட்பு !!!


கோவையில் கொடூரம்.. 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை ? குளக்கரையில் சடலமாக மீட்பு !!!

ஆட்சிகள் மாறினும் காட்சிகள் மாறவில்லை பெண்கலுக்கு எதிராக தொடரும் கொடுரம்  

நேற்று மாலை முதல் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட அவலம்...

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி  கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு குளக்கரையில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் கொங்கு மண்டலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சூலூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணையைத் நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இரு ஆசாமிகள் மீது சந்தேகம் வலுத்து உள்ளதால், அவர்களைப் பிடிக்க தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, கோவை சூலூர் அடுத்த  பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது திடீரென மாயமாகி உள்ளார். இருட்டியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம், பக்கத்திலும் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்து உள்ளனர்.

சிறுமி குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால், பெரும் தவிப்புடன் தேடி வந்து உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை அதே பகுதியில் உள்ள குளக்கரை ஓரத்தில் சிறுமி மர்மமான முறையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயினர்.

உடனடியாக இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு (GH) அனுப்பி வைத்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ? கொலை செய்தனரா ? 

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சூலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவர்கள் தான் இந்த விபரீத கொடூரத்தின் பின்னணியில் இருக்கக் கூடும் என போலீஸார் வலுவாகச் சந்தேகிக்கின்றனர்.கோவையில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கி உள்ள இந்தச் சிறுமியின் படுகொலைச் சம்பவத்தால், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து வேண்டும் எனப் பொதுமக்கள் அந்த பகுதியில் கூடி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks