Our team

header ads

துபாய்க்கு சுற்றுலா சென்ற கோவையை சேர்ந்த 12 பேர் அங்கு இருந்து திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்ட நிலையில் இந்திய அரசால் மீட்கப்பட்டு கோவை திரும்பி உள்ளனர்.

துபாய்க்கு சுற்றுலா சென்ற கோவையை சேர்ந்த 12 பேர் அங்கு இருந்து திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்ட நிலையில் இந்திய அரசால் மீட்கப்பட்டு கோவை திரும்பி உள்ளனர்


கோவை: வளைகுடா நாடுகளில் கோர்ப்பதற்றத்திலிருந்து கோவை திரும்பிய மக்கள் அங்கு நிலவும் பதற்றமான சூழலை வீடியோ காட்சிகளை காட்டி பகிர்ந்து கொண்டனர்.

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் துபாய்க்கு சுற்றுலா சென்ற கோவையை சேர்ந்த 12 பேர் (3 குடும்பங்கள்) அங்கு இருந்து திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்ட நிலையில் இந்திய அரசால் மீட்கப்பட்டு கோவை திரும்பி உள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், சுற்றுலாவிற்காக மூன்று குடும்பங்கள் நாங்கள் துபாய் சென்று இருந்தோம், சுற்றுலாவை முடித்துவிட்டு கோவை வருவதற்காக விமான நிலையம் சென்று கொண்டிருந்த பொழுது விமான நிலையத்தை சுற்றிலும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடைபெற்றது என்றனர். இதன் காரணமாக விமான நிலையத்திற்கு சென்ற தங்களை மீண்டும் ஹோட்டலுக்கே திரும்பி செல்ல கூறி விட்டார்கள் என தெரிவித்தனர். 

மூன்று நாட்கள் துபாயில் மிகவும் சிரமத்துடன் தங்கி இருந்ததாகவும் அங்கு உணவு மருந்து அனைத்தும் விலை அதிகமாக இருந்ததாக தெரிவித்த அவர்கள் அதனைத் தொடர்ந்து தன்னுடைய நண்பர் மூலம் பாஜகவினரை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் NRI யை தொடர்பு கொண்டு  நாங்கள் பத்திரமாக கோவை திரும்பியதாக குறிப்பிட்டனர். அங்கு பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

அபுதாபியில் விமான நிலையத்திற்குள் இமிகிரேஷனை தாண்டிய அவர்களுக்கு மட்டும் உணவுகள் அனைத்தும் வழங்கப்பட்டதாகவும் மீதமிருந்தவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த அவர்கள் மீடியாக்களில்  அபிதாபி அரசு அனைவரையும் பார்த்துக்கொண்டது என்று செய்திகள் வெளியாகி வருகிறது ஆனால் அது முழுமையான உண்மை இல்லை அதே சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கூறப்படுவதும் உண்மை இல்லை என்று தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks