Our team

header ads

பெரியதடாகம் பகுதியில் வழி தவறி வந்த புள்ளி மான் -பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு சிகிச்சை

பெரியதடாகம் பகுதியில் வழி தவறி வந்த புள்ளி மான் நாய்கள் கடித்து குதறியதில் கால் உடைந்து காயமடைந்தது பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு சிகிச்சை


கோவை - 08-03-26,கோவை பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளி மானை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியதில் கால் உடைந்து காயமடைந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து மீட்டு சிகிச்சை அளித்தனர்.

கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளில் வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் வனப்பகுதியில் இருந்து ஒரு புள்ளி மான் வழி தவறி பெரியதடாகம் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் வந்துள்ளது.

அதனை பார்த்த அங்கிருந்த 4 க்கும் மேற்பட்ட நாய்கள் புள்ளி மானை சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கியுள்ளன. இதில் மானில் ஒரு கால் உடைந்து துண்டாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த மான் ஓடமுடியாமல் அருகில் இருந்த ஒரு வீட்டில் காம்பவுண்டுக்குள் தஞ்சமடைந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு சிகிச்சை அளித்து வருகிறனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks