Our team

header ads

9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் கேஸ் இணைப்பு: பிரதமர் மோடி-ரூ. 5, 650 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார்.

9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் கேஸ் இணைப்பு: பிரதமர் மோடி !!!திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 5, 650 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார்.


நீலரிகி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களையும் மோடி தொடக்கி வைத்தார். கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் வகையில் 370 கி.மீ. சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டிற்கு 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையை காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.

நாகா்கோவில் - சாா்லபள்ளி அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06357), கோவை போத்தனூா் - தன்பத் அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06619), ராமேசுவரம் - மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06621), திருநெல்வேலி - மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06708), மயிலாடுதுறை - காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் (06835) ஆகிய 5 ரயில் சேவைகளைத் தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

திருச்சிக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சி தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமானது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் திட்டங்கள் அடிக்கல் நாட்டப்படுவதில் மகிழ்ச்சி. பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசுபாடு குறையும்; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

கடந்த ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் வந்திருந்தேன். விவசாயிகள் முதல் மாணவர்கள் வரை பயன்பெறுகின்றனர்.

4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும். இந்த கட்டமைப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் நேரடியாக கேஸ் (சமையல் எரிவாயு) வழங்குவதை உறுதி செய்யும்.

இத்திட்டத்தின் மூலம் 200 வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு கிடைக்கும். 201 இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்படும். இந்தத் திட்டங்கள் மூலம் எரிசக்தித் திறன் அதிகரித்து போக்குவரத்து வசதிகள் மேம்படும்.

கடந்த வாரம் மதுரை வந்தபோது அம்ருத் பாரத் திட்டத்தின்படி 8 ரயில் நிலையங்களைத் தொடக்கி வைத்தோம். இன்று பல புதிய ரயில்கள் தொடக்கி வைக்கப்பட்டு உள்ளன. இவை தென் மாவட்டங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கிறது.

இதனால், உள்ளூர் பொருளாதாரம் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சுற்றுலாத் துறை மேம்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்போடு மத்திய அரசு உழைக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks