கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆனைமலை பகுதி சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சந்தன கிருஷ்ணன் (28) என்பவர் மீது ஆனைமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி கொலை முயற்சி வழக்கின் குற்றவாளியான சந்தனகிருஷ்ணன் (28) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.


0 கருத்துகள்